76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஆகியோர் பிரதமர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.