கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் பொலிஸ் நிலையமொன்றை அமைக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரண் அலசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளில் அதிக வாகன நெரிசல் மற்றும் வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் ஊழல்களை கட்டுப்படுத்தும் வகையில் வைத்தியசாலைக்குள் பொலிஸ் நிலையத்தை அமைக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய  அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு சுமார் 15,000 பேர் வருகை தருவதாகவும் சில பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட தற்போதைய பொலிஸ் நிலையம் மக்களையும் சுற்றுப்புற மக்களையும் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியசாலையை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் கடமை நேரங்களில் அதிக வாகன நெரிசல் இருப்பதால் நோயாளிகளின் சிகிச்சைக்கு  இடையூறாக இருப்பதாகவும், இது குறித்து பொலிஸாருடன் கலந்தாலோசித்து வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.