சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சினால் ஏற்பாட்டு செய்யப்பட்ட நஞ்சுத் தன்மையற்ற மரகறி சந்தை.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அரச அலுவலக வளாகங்களில் வீட்டுத் தோட்டங்களை அமைக்கமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகின்றது.
இதற்கமைய சப்ரகமுவ மாகாண சபையின் கட்டிடத்தொகுதி வளாகத்தில்; சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்செய்கையானது வெற்றியளித்து.
மேற்படி சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சினால் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதி வளாகத்தில் பயிரிடப்பட்ட ஒரு தொகுதி மரக்கறி வகைகள் பறிக்கப்பட்டு நேற்று முன்தினம்(5) அவை மாகாண சபையின் பிரதான அமைச்சினால் மாகாண சபை கட்டிடத்தொகுதியில் மரகறி விற்பனை சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்யப்பட்டது.
இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத், மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் எச்.டி.சிசிர, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயாளர் மஞ்சுலா இதிகாவெல உட்பட அரச அதிகார்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மரகறிகளை பெற்று கொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ் –