பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அரச அலுவலக வளாகங்களில் வீட்டுத் தோட்டங்களை அமைக்கமாறு அரசாங்கம் அறிவுறுத்தி வருகின்றது.

இதற்கமைய சப்ரகமுவ மாகாண சபையின் கட்டிடத்தொகுதி வளாகத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் அலுவலகத்தினால் முன்நெடுக்கப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்செய்கையானது வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஆளுநர் அலுவலகத்தினால் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதி வளாகத்தில் பயிரிடப்பட்ட ஒரு தொகுதி மரக்கறி வகைகளை சப்ரகமுவ மகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் மஞ்சுலா இதிகாவெல தலைமையிலான குழுவினர்கள் நேற்றையதினம் (29) மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் எச்.டி.சிசிர ஆகியோரிடம் கையளித்தனர்.

இரத்தினபுரி நிருபர்