சம்பள உயர்வை அதிகரிக்க கோரி செல்வகந்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாலாந்த சம்பளத்தை அதிகரிக்க கோரி
பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட தொழிலாளர்களினால் 05.02.2024திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்னு முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து
கொண்டனர். தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே . எங்களுக்கு சம்பளத்தை
உயர்த்தி தா .போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷசங்கள்யிட்டும்
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நாலாந்த தாம் பெறுகின்ற ஆயிரம் ருபாய் சம்பளம் போதாது நாட்டில்
அத்தியாவசிய பொருட்கள் அனைத்துக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத ஒரு சூழ் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் ஆகவே நாட்டின் ஜனாதிபதி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எமக்கான உரிய ஊதியத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

 எஸ் சதீஸ்