கோட்டா கோ கம போராட்டத்தில் தீவிரமாக பங்குபற்றிய அருட்.தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அருட்தந்தை. ஜீவந்த பீரிஸுக்கு எதிராக கோட்டை பொலிஸாராலும், கொம்பனித்தெரு பொலிஸாராலும் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி அருட்தந்தை. ஜீவந்த பீரிஸ், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செயதிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.