சமூக நலன்புரி நிறுவனங்களில் ஒன்றான லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை இலங்கை முழுவதும் செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அம்பாறை மாவட்ட மட்டுப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் மீனவ சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, 75 000 மீன் குஞ்சுகளை வளத்தாப்பிட்டி குளத்திற்கு வழங்கி வைத்துள்ளது.

மேலும் இந் நிகழ்வில் இவ்வுதவியை செய்த சர்வதேச ஐக்கிய பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜீபிடர்சன் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்ததோடு மகிச்சியையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை இயக்க மேலாளர் தியாகராஜா யுவராஜன், மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான மூர்த்தி சதீஷ் கண்ணா, டியா செர்லின் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.