சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்தே காணாமல் போயுள்ளதாக நேற்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தேடுதல்களை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சிறுமிகளை பருத்தித்துறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமிகள், சிறுவர் இல்லத்தில் வசிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகள் மூவரும் சிறுவர் இல்லத்தில் மீளவும் சேர்க்கப்பட்டனர்.