சிறைச்சாலை சென்ற சஜித்திடம் ரஞ்சன் சொன்னது என்ன?

0
381

சுதந்திர தினம், வெசாக் தினம், பொசன் தினம் போன்ற தினங்களில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என அரசாங்க தரப்பு கூறிய போதிலும் கூட அது முழுக்க முழுக்க பொய் மற்றும் ஏமாற்று வேலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனது உயர்கல்வியின் பூர்த்தியுடன் நாட்டுக்கு வினைத்திறனுடனும் அர்த்தமுள்ள வகையிலும் சேவையாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவேன் என்ற செய்தியை நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு ரஞ்சன் ராமநாயக்க எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று காலை சென்று ரஞ்சன் ராமநாயக்கவைச் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களுக்கு விவரண விளக்கங்களன்றி செயற்பாடே தேவை. நாட்டில் நிலவும் கடுமையான நெருக்கடி பற்றி வாராவாரம் ஒவ்வொரு கதை கூறுவதைத் தவிர நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டவட்டமான செயற்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எவ்வாறாயினும், அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது, 24 மணித்தியாலங்களில் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக தெரிவித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் விவரண ரீதியான விளக்கங்களை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டையே மக்கள் விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here