சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட  41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவின் உத்தரகாண்ட்  மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.

கடந்த 12 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து இன்று 17 ஆவது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது.  (28) மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்திற்கு அருகில் குவிந்தனர்.

இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக  மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அம்பியுலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.