சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் காலமானார்

0
423

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இன்று காலை  கட்சியின் தலைவரும் மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான தோழர் விஜே டயஸ் காலமானார்.

அவர் அனைத்துலகக் குழுவின் தலைவர்களில் ஒருவராகவும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் 27 அவர் தனது 81வது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார்.

தோழர் விஜேயின் மரணம்,  குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சிக்கும், ஒட்டுமொத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் மற்றும் இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் பெரும் இழப்பாகும். அவர் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட, சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளுக்காக, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சளைக்காத போராளியாக இருந்தார்.

தோழர் விஜே, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். 1964 இல் லங்கா சம சமாஜ கட்சி, பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்ட போது. ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

அப்போது லங்கா சம சமாஜக் கட்சியின் இளம் உறுப்பினராக இருந்த தோழர் விஜே, காட்டிக்கொடுப்பை எதிர்த்த இளைஞர் குழுவில் ஒரு முன்னணி நபராக இருந்தார். மேலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், தேவையான அரசியல் படிப்பினைகளைப் பெற்று, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதியான அரசியல் அடித்தளங்களை அமைத்தார்.

1987 டிசம்பரில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரியவின் துயரமான, அகால மரணத்திற்குப் பின்னர், தோழர் விஜே அந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த மே மாதம் சோசலிச சமத்துவக் கட்சியின் சமீபத்திய மாநாட்டில் அவர் கட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

மறைந்த தோழர் விஜே டயஸின் பூதவுடல் பொரளை கனத்த வீதியில் உள்ள ஜெயரட்ன ரெஸ்பெக்ட் ஹோம்’ மலர்சாலையில் ஜூலை 28 வியாழன் காலை 9 மணி முதல் ஜூலை 30 சனிக்கிழமை வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து இறுதி ஊர்வலமாக சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பொரளை மயானத்திற்கு கொண்டுச் செல்லப்படும்.  பிற்பகல் 3 மணிக்கு அஞ்சலி கூட்டம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படும்.

https://www.wsws.org/ta/articles/2022/07/27/dias-j27.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here