ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

0
177

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கத்தின் பொப்பி மலர் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, முதலாவது பொப்பி மலரை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் சங்கம், வருடாந்தம் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here