ஜனாதிபதிக்கு விஷேட பை

0
248

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான விசேட பை (Attaché Case)  இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த விசேட பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு விசேட பெட்டியை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும்.

இந்த உலக பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவ்வாறான பெட்டி ஒன்றை உருவாக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரைக்கமைய, இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் விபரக்குறிப்புகளின்படி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் தலைமையிலான துறைசார் நிபுணர்கள் குழு, சிறப்பு தொழில்நுட்பத்துடன் தனித்துவமான வடிவமைப்பாக இந்த பெட்டியை உருவாக்கியது.

இது ஒரு ஜனாதிபதிக்கு பின்னர் மற்றுமொரு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடிய நீடித்து நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்ததுடன், அதற்கமைய பாதுகாப்பான மற்றும் திட்டமிடப்பட்ட முறையில் உயர்தர தோலைப் பயன்படுத்தி இந்தப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here