ஜனாதிபதியானால் இன்று வரவு செலவுதிட்டம் சம்ர்ப்பிப்பு

0
422

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக, இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் வரவு- செலவுத் திட்ட உரை இடம்பெறும்.

அதனையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன், இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இடைவேளையின்றி நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக இன்று சமர்ப்பிக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 04 மாதங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here