ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வைபவரீதியாகத் ஆரம்பமாகவுள்ளது.

அரசமைப்பின் 33ஆவது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது எனவும் பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.