ஜனாதிபதி மாளிகையில் இரவு உணவு தயாரிக்கும் போராட்டக்காரர்கள்!

0
494

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும், நீர் விளையாட்டுகளை விளையாடியும், தற்போது இரவில் சோறு சமைக்க தயாராகும் ஒளிப்படங்கள்   பகிரப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி  மாளிகைக்குள் நுழைந்த ஆர்வலர்கள் அறைகளில் நடந்து சென்று வசதியான இருக்கைகளில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி மாளிகையின் மேற்கூரையில் ஏறி தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்.

இன்று சனிக்கிழமை பிற்பகலில் ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்பு அளித்து வரும் பாதுகாவலர்களும் பேரூந்துகளை விட்டு வெளியேறினர். பின்னர், ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் செயற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here