வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் (ருஹுணு மகா கதிர்காமம்) ஆடிவேல் விழா எசல திருவிழா எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது
.என ருஹுனு மகா கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர உத்தியோகபூர்வமாக அறிவித்தார். .
16 நாட்கள் திருவிழா பெரஹரா ஊர்வலம் இடம் பெற்று ஜுலை 21ஆம் திகதி இரவு பெரும் பெரஹரா இடம்பெறும்.
ஜுலை 22ஆம் திகதி மாணிக்ககங்கையில் நீர் வெட்டு திருவிழாவுடன் அதாவது தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
கன்னிக்கால் அல்லது பந்தல்கால் நடும் நிகழ்வு (24) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சுப முகூர்த்த வேளையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(வி.ரி.சகாதேவராஜா)