இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியா – சிட்னி நகரிலுள்ள சில்வர் வோட்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யுவதியொருவரை தவறாக நடந்துக்கொண்டார் எனும் குற்றச்சாட்டில், தனுஷ்க குணதிலக்க நேற்று (நவ.06) அதிகாலை அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தனுஷ்க குணதிலக்க பிணை கோரிய போதிலும், அந்த நாட்டு நீதிமன்றம் பிணை வழங்க நிராகரித்திருந்த நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ளார்.