வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று (24) நண்பகல் 12.05க்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ழைவக்கப்பட்டுள்ளது.

பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மைக் மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல், வைபவ், விடிவி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது