தொடர்ச்சியாக பெய்த கடும்மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் காரணமாக 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திடீரென ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மண்சரிவில் சிக்குண்டுள்ள மக்களை ஹெலிகொப்டர் மூலமாக மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சிக்குண்டவர்களின் நிலைகுறித்து எந்தத் தகவலும் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.