‘தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை’

0
376

எனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடைய பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கின்றன. மக்கள் வழங்கிய அதிகாரத்துடன் ஐந்து வருடகாலம் பதவியில் இருப்பேன். தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

என்னை பதவி விலக கோரி தொடர்ச்சியாக வீதிப்போராட்டங்கள் இடம்பெற்று வருவதையும் அவதானிக்கின்றேன். எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் தோல்விடையந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here