2023 ஆம் ஆண்டுக்கான நடைபெற்ற ஜந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நு/நாவலர் ஆரம்ப பிரிவு பாடசாலையை சேர்ந்த கிருஷ்ணகுமார் டிப்திஷா என்ற மாணவி வெட்டுப் புள்ளியினைக் கடந்து 170 புள்ளிகளைப் பெற்று மிகவும் திறமையான முறையில் சித்தியடைந்துள்ளார்.

இவரின் இந்தப் பெறுபேறு தனது பாடசாலை அதிபர், மற்றும் கற்பித்த ஆசிரியர்,பெற்றோர்ருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட கி.டிப்திஷாவிற்கு கற்பித்த ஆசிரியர்களான ம.பிரஷாந் மற்றும் செ.சிவகுமார் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அதிபர்  செ.சதாசிவம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

செ.திவாகரன்