12 வயதுடைய மாணவர், ஒருவர் அருகில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகளை பிளேட்டினால் வெட்டியுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயதுடைய மாணவரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 9, 12 மற்றும் 15 வயதுடைய நான்கு மாணவிகளே காயமடைந்துள்ளனர். இந்த மாணவிகளில் ஒருவரின் கைகளை தைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.