நாளை புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் பொதுஜன பெரமுனையைச் சேர்ந்த நாமல் ராஜபக்சவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இளைஞர் விவகார அமைச்சர் பதவிக்கு நாமல் ராஜபக்சவும், வர்த்தக அமைச்சர் பதவிக்கு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடைசி நேரத்தில் இவை மாறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையைச் சேர்ந்த சுமார் 25 பேர் அமைச்சர் பதவிகளை வகிக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது