தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலைக்கு பகுதிக்கு அருகில் (13.11.2023) மாலை இடம்பெற்றுள்ள கோஷ்டி மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு  இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம்  sanjeevan (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருடன் நீண்டநாள் பகை கொண்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் ஏற்பட்ட குழு மோதலில் இந்த கத்தி வெட்டு சம்பவம் நடந்தேறியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேநேரத்தில் உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ் , கௌசல்யா