Breaking news நீதிமன்ற கூண்டிலிருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கிச்சூடு

0
421

வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்ற கூண்டிலிருந்த ஒருவரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிஸை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் இலக்க நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த துப்பாக்கிப்பிரயோகத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதியொருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here