மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராகவும் நுவரெலியா இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

குறித்த போராட்டம் நுவரெலியா மின்சார சபையின் காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது,

இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் , தேசிய வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த கோரியும் பல வாசகங்கள் எழுதிய எதிர்ப்பு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுவரெலியா மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நானுஓயா நிருபர்