மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு

0
200

வலப்பனை மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபரகலை பிரதேச வனப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மந்தாரம்நுவர பொலிசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் (30) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார் துப்பாகி சூட்டுக்கு இலக்கானவர் கண்டி தலாத்து ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாரஸ்தன்ன பிரதேசத்தை சேர்ந்த (41) வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மந்தாரம்நுவர எலமுல்ல வனபகுதியில் புதையல் தோண்டுவதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.

இவர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் வனப்பகுதிக்கு சென்று புதையல் தோண்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர்.

இவர்கள் வனப்பகுதிக்கு சென்றதை அவதானித்தவர்கள் 119 அவசர சேவை பொலிஸாருக்கு இரகசிய தகவலை வழங்கியதாகவும் அதையடுத்து தளத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து நேரத்தில் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து கான்ஸ்டபிள் ஒருவர் பிஸ்தோல் துப்பாக்கியுடன் சந்தேக நபர்களை துரத்தி பிடிக்க முற்பட்டத துப்பாக்கி வெடித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவர்மீது சூடு பட்டு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே சந்தர்ப்பத்தில் ஏனைய சந்தேக நபர்கள் நான்கு பேரையும் பொலிஸார் போராட்டத்திற்கு மத்தியில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபரை காயங்களுடன் ரிகலகஸ்கட பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர் கண்டி பெரியாஸ்பத்திரியில் இல;10 வார்ட்டில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவர்களை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

(ஆ.ரமேஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here