நுவரெலியா பிரதான நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு இடம் பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் திங்கட்கிழமை (12) காலை வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டமை தெரியவந்ததுடன் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யதுள்ளார்.

ஒரே உரிமையாளரின் இரண்டு வர்த்தக நிலையங்களான பல்பொருள் வர்த்தக நிலையமும் , விவசாய மருந்து வர்த்தக நிலையத்தின் பின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளையும் சில பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

எனினும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் , பணம் தொடர்பில் பெருமதி இதுவரையில் கண்டறியப்பவில்லை எனவும் இக்கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளனர்

மேலும் சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கண்காணிப்புக் கமராவில் பதிவான காட்சியின் உதவியினைக் கொண்டு தடயவியல் பொலிஸாரோடு இணைந்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு செ.திவாகரன்