பட்டினியால் வாடும் மிருகக்காட்சிசாலை விலங்குகள்

0
402

தெஹிவளையில் உள்ள மிருகக்காட்சிசாலை மற்றும் ஏனைய மிருகக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு நாளாந்த உணவு வழங்குவதற்கு பணம் இல்லை என்று அமைச்சரிடம் விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

வனஜீவராசிகள் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது விவசாய, வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விலங்கியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உல்லாசப் பயணிகளின் வருகை குறைவாலும், எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்ததாலும், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தாலும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக கடுமையான உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதீட்டில் அரசு ஒதுக்கிய பணமும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிருகக்காட்சி சாலைகளுக்கு உணவினை விநியோகித்தவர்களுக்கு 59 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதுடன், இந்த வருடத்தின் எஞ்சிய பகுதிக்கு குறைந்தது 120 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here