வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுகளுக்கு இணையான கொடுப்பனவினை தமக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நாடலாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் (13) காலை முதல் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார ஊழியர்கள் காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த பணி பகிஷ்கரிப்பு தொடர்பான தகவல் அறியாத பிரதேச மக்கள் வைத்தியசாலையின் சேவையை பெற்றுக்கொள்ள வருகை தந்து திரும்பி சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மேலும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு வெறிச்சோடி கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் அவசர சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் நோயாளர்களை கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் பொறுப்பேற்று
வைத்தியர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதையும் அவதானிக்ககூடியதாக இருந்தது.

அதேநேரத்தில் இந்த வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் சிலர் சிவில் உடையணிந்து சேவையில் ஈடுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-ஆ.ரமேஸ்-