தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ‘பந்துல’ என்ற யானை உயிரிழந்துள்ளது. உடல்நலக்குறைவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பந்துல” யானை 1949 முதல் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்தது. இந்த யானை உயிரிழக்கும்போது வயது 79.
குறித்த யானை திடீரென தரையில் வீழ்தந்ததையடுத்து, கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சையளித்தபோது யானை ஏற்கனவே இறந்துவிட்டதாக உயிரியல் பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.