கொழும்பு -04 பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் பஸ் – லொறிமோதிக்கொண்டு விபத்தக்குள்ளானதில் காயமடைந்த ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் பயணித்த பஸ் ஜூபிலி புல்லஸ் சந்திக்கு அருகாமையில் ‘விளக்கு சமிக்ஞைகள் இன்றி’ வந்த ரொறி ஒன்றுடன் மோதி வீதியிலேயெ தழைகீழாக புரண்டு விபத்தக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 2 பெண்கள் உட்பட 7பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.