2024இற்கான புத்தங்கள் தற்போதும் அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். யுனெஸ்கோவுடன் இணைந்து 8 பாடசாலைச் சேர்ந்த 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்க உள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்   (16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம். உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது நமது பிள்ளைகளின் கல்வித் தேவையை தாமதப்படுத்த முடியாது. அதற்கு அவசியமான கல்வி மறுசீரமைப்புக்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளைப் பெற்றுக்கொடுப்போம். யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட்டுக்கு கிடைக்கும்.” என்று கல்வியமைச்சர் தெரிவித்தார்.