Päckchen aus Bananenblättern, mit Reis und Fleisch gefüllt, Vietnam

சாப்பாட்டு பார்சல், மற்றும் ஏனைய உணவு வகைகளின் விலைகளை பத்து வீதத்தில் அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவு பார்சல்  உட்பட் அனைத்து உணவுப் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்படி, உணவுப் பார்சல் உட்பட அனைத்து உணவுப் பண்டங்களின் விலைகளும் 10 சத வீதத்தால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.