பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் MP க்கு புதிய பதவி

0
173
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பொருளாளராக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தின் தலைவராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களும், செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இத் தெரிவின் போது எவ்வித போட்டியு மின்றி ஏகமானதாக பொருளாளர் தெரிவு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ் நட்புறவு சங்க கூட்டத்தின் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் ,பிரதி சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here