பிரதி முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின்

0
185

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பிரதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

(28) ஆளுநர் மாளிகையினால் இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரதி முதலமைச்சர் பதவி அளிப்பது தொடர்பில் மாநில முதலமைச்சரும் அவரது தந்தையுமான மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் பரிந்துரைத்திருந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (29) மாலை 3.30 மணியளவில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here