பிரபல இயக்குனர், நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் உதவி, அசோசியேட் இயக்குநராக பணியாற்றியிருக்கும் இயக்குநர் ஜி. மாரிமுத்து, அந்த படங்களின் உருவாக்கத்தில் மூளையாகவும் இருந்து செயல்பட்டுள்ளார். அதேபோல் நடிகராக மாறிய பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் தோன்றி தனது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ராஜ்கிரணின் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் ஆகிய மண்மணக்கும் படங்களில் பணியாற்றிய இயக்குநர் ஜி. மாரிமுத்து, இயக்குநர் வசந்த், சீமான்,  எஸ்.ஜே. சூர்யா, மணிரத்னம் ஆகியோரிடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்உள்ளார்.

எஸ்ஜே சூர்யாவிடம் வாலி படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றினார் இயக்குநர் மாரிமுத்து

இயக்குநரான மாரிமுத்துவை யுத்தம் செய் படம் மூலம் நடிகராக்கினார் இயக்குநர் மிஷ்கின். இந்த படத்தில் இசக்கி முத்து என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார்

காக்கா முட்டை புகழ் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார்

கண்ணும் கண்ணும் என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மாரிமுத்து. 2008இல் வெளியான இந்த படத்தில் பிரசன்னா, உதயதாரா, வடிவேலு, சந்தானம், விஜயகுமார் உள்பட பலர் நடித்திருப்பார்கள். வடிவேலு – சந்தனம் இணைந்து நடித்த படமாக இது உள்ளது.