முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 7 பரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தோட்டம் செய்வதற்காக உரிமையாளரால் காணியை கனரக இயந்திரம் மூலம் பண்படுத்தப்பட்டபோதே கடந்த மே மாதம் 31ஆம் திகதி நிலத்தில் புதைக்கப்பட்ட பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியை தோண்டும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டதையடுத்தே இந்த 7 பரல் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.