புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பம் கோரலும் – கௌரவிப்பு நிகழ்வும்

0
378

ஆசிரியர் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் தமது அங்கத்தவர்களின் பிள்ளைகளின் நலன் கருதி, வருடா வருடம் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதேபோன்று இவ்வருடமும் 2019,2020,2021ஆம் வருடங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த முன்னணியின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் க.பொ.தராதர  பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை 1988,1990ஆம் ஆண்டுகளில் நியமனம் பெற்ற அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

எனவே, அதற்கான விண்ணப்பங்களை உரிய தரப்பினரிடமிருந்து கோரியுள்ளது.

இவ்விண்ணப்பங்கள் செயலாளர் நாயகம், ஆசிரியர் விடுதலை முன்னணி, த.பெ.இலக்கம் – 10, நுவரெலியா எனும் முகவரிக்கு 10.07.2022 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்புமாறும் விண்ணப்ப உறையின் மேல் இடது மூலையில் “புலமைப்பரிசில் திட்டம்,கௌரவிப்பு போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பவர்கள்” உரியதை குறிப்பிடப்பட வேண்டும் எனவும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here