பொகவந்தலாவை லிட்டில் ஏஞ்சல் முன்பள்ளியின் 15 வது ஆண்டு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் (05.01.2025) பொகவந்தலாவை கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்பள்ளியின் நிர்வாக இயக்குனர் என்டன் செங்கோல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் விஜேந்திரன் மற்றும் உதவிக் கல்வி பணிப்பாளர் செந்தூர்வெல், பொகவந்தலாவை பிரதேச பாடசாலை அதிபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
பொகவந்தலாவை நகரில் வாகன பேரணியோடு அணிவகுப்பு மரியாதையுடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டு கொடியேற்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
நிகழ்வின் சிறப்பம்சமாக 15 வது ஆண்டு விழாவினையொட்டி ‘கீறல்’ எனும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டதோடு முன்பள்ளிக்கான இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.