இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ‘மாமன்னன்’.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கிய முதல் இரண்டு படங்களின் தொடர் வெற்றியாலும், உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படமே தனது சினிமா பயணத்தின் கடைசி திரைப்படம் என அறிவித்திருந்த காரணத்தாலும், தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு குணசித்திர வேடம் ஏற்று நடித்திருந்ததாலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.