மதுபான வகைகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டதையடுத்து மதுபான விற்பனையில் 40 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனை வீழ்ச்சி மதுவரி வருமானத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகளவு விற்பனை செய்யப்படும் மதுப்பிரியர்கள் அதிகம் கொள்வனவு செய்யும் மதுபான வகையொன்றின் கால் போத்தல் மதுபானம் 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது.