மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி பிரிஸ்கில்லா சானின் பிரம்மாண்ட சிலையை செய்து தங்கள் வீட்டு தோட்டத்தில் வைத்துள்ளார். இது மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி மீது வைத்துள்ள தீராக்காதலின் சான்று என பலரும் பாராட்டி வருகின்றனர்.
40 வயதான மார்க் சக்கர்பெர்க் தனது மனைவி, சிலையுடன் நிற்கும் புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற கலைஞர் டேனியல் அர்ஷாம் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர் இவர்.
பிரிஸ்கில்லா சானின் சிலை அவரது சமீபத்திய படைப்புகளில் ஒன்றான டிஃப்பனி கிரீன் பாட்டினாவைப் போலவாயய் உள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன.