இலங்கையின் செக்வோல் (Tchoukball) தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அடுத்த மாதம் 02ஆம் திகதி மலேசியா நாட்டில் நடைபெறவுள்ள 9ஆவது ஆசிய பசுபிக் செக்வோல் சம்பியன் போட்டியில் கலந்து கொள்வதற்காக அக்கரைப்பற்றைச் சேர்ந்த செக்வோல் வீரர் எம்.எச்.சபீர் அலி பயணமாகின்றார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) விளையாட்டு பயிற்றுவிப்பாளரான இவர், மெய்வல்லுனர் போட்டிகளிலும் தேசிய ரீதியில் சாதனை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.