மலையக அரசியல் அரங்கம் : ‘3 ஆண்டுகள் 3 நிகழ்வுகள்

0
176

மலையக அரசியல் அரங்கம் தனது மூன்றாவது ஆண்டு நிறைவை
‘3 ஆண்டுகள் 3 நிகழ்வுகள் ‘
எனும் மகுடத்தில் கண்டி மாநகரில்
எதிர்வரும் 2 ஆம் திகதி கொண்டாடுகிறது.

கண்டி, பேராதனை வீதி இந்து கலாசார நிலையத்தின் விசேட அரங்கில் இடம்பெறும் இந்த நிகழ்வு 2024 நவம்பர் 2 ஆம் திகதி தொழிற்சங்க துறவி வி.கே.வெள்ளையன் பிறந்த நாளை நினைவு கூர்ந்து மாலை 2 மணிமுதல் 4 மணிவரை நடைபெறவுள்ளது.

நிகழ்வு 1.
அரங்கத்தின் 3வது ஆண்டு மாநாட்டு தலைமையுரையும் கொள்கைப் பத்திர வெளியீடும் மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபர்
மயில்வாகனம் திலகராஜாஜவினால்
மும்மொழிகளிலும் அளிக்கை செய்யப்படவுள்ளது.

நிகழ்வு 2.
‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன் நினைவேந்தலும் விருது வழங்கலும். இதில்
‘வி.கே.வி- அரசியலாளர் விருது’ தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் மூத்த அரசியல் வாதியுமான
திரு-வீ.ஆனந்தசங்கரி அவர்களுக்கும் ,

வி.கே.வி. சமூக – அரசியல் செயற்பாட்டாளர் விருது, நவ சமசமாஜ கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளரும் மத்திய மாகாண சபை தேர்தல் வேட்பாளருமான
திரு.ப.இராஜரட்ணம் அவர்களுக்கும்,
வி.கே.வி – ஊடக இலக்கிய விருது – மூத்த ஊடகவியலாளரும் இலக்கியச் செயற்பாட்டளருமான
கண்டி அ.இ.இராமன் அவர்களுக்கும் வழங்கி வைக்கப்படவுளது

உரையரங்கமாக அமையவுள்ள 3 வது நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவரும் அரசறிவியல்துறை பேராசிரியருமான உப்புல் அபேரட்ன
சிங்கள மொழியில் முதலாவது உரையை ஆற்றவுள்ளார்.

இரண்டாவது உரையை
பட்டயக் கணக்காளர்
செல்வி. சோபிக்கா சிவாகரன் ஆங்கில மொழியில் ஆறாறவுள்ளார்.

மூன்றாவது உரையை சமூக நீதிக் கட்சியின் தலைவர் நஜா முஹம்மட் M.A .Political Science ( UK) தமிழ் மொழியில் ஆற்றவுள்ளார்

அரங்கத்தின் சிவில் சமூகம் இணைப்பாள்ர கிருஷ் நாகரட்ணத்நின் நன்றியுரை யுடன்
நிகழ்ச்சிகள் நிறைவடையும்.

( யாவருக்குமான அழைப்பு – முன்பதிவு செய்து கலந்து சிறப்பிக்கலாம்- பதிவு செய்ய வேண்டிய வட்சப் இலக்கம் தேசிய நிகழ்ச்சி அமைப்பாளர் 772880857. இந்த வட்சப் இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பிதழைக் காட்டுவதன் மூலம் பங்குபற்றலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here