தரம் 1-5 வரை உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு 2024 மார்ச் மாதம் முதல் தினசரி இலவச மதியநேர உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இளம் மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 16 இலட்சம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர். அதேநேரம், அரசாங்கம் இதற்காக 1600 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நேரங்களில் ஒவ்வொரு மாணவரும் போஷாக்கான உணவைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

மதிய உணவு வழங்குவதற்கான தினசரி ஒரு மாணவருக்கு 110 ரூபா ஒதுக்கீடு என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆரம்பப் பிரிவு மாண வர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் கல்விச் செயல்திறனுக்கு பங் களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.