மாணவர்களை பலவந்தமாக வெளியேற்றும் இ.போ.ச பஸ் நடத்துனர்

0
314

அட்டன் டிப்போவிற்கு சொந்தமான இ. போ.ச பஸ் வண்டியில் நடத்துநர் ஒருவர் கினிகத்தேனை கடவளை தமிழ் பாடசாலை மாணவர்களைப் பலவந்தமாக பஸ்ஸிலிருந்து இறக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.

இ.போ. பஸ் வண்டியில் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றவிட்டால் 1984 நம்பருக்கு அழைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இ.போ.ச பஸ் வண்டி நடத்துனரே இவ்வாறு தவறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து குறித்த மாணவர்களை பலவந்தமாக பஸ்ஸிலிருந்து இறக்கியுள்ளார்.

இதனால் குறித்த மாணவர்கள் எதுவும் வாய் பேச முடியாத நிலையில் மன உளைச்சலுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக இருந்தது

நுவரெலியா மாவட்டத்தில் அரச பஸ்களில் பருவகால சீட்டுகளைப் பெற்ற தமிழ் பாடசாலை மாணவர்களைப் புறக்கணிக்கும் நிலைமை நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here