மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் இன்று வியாழக்கிழமை காலை விபத்தொன்றில் காலமானார்.

சாதாரண கிரியைகள் தொடங்கி மஹா கும்பாபிஷேகம் போன்ற பெரும் மஹோற்சவங்களை முன்னின்று நடத்தி, பல வருடகாலமாக இறைபணியாற்றி வந்தவர்.

1962 பெப்ரவரி 05ஆம் திகதி பிறந்த இவர் அமரர் சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்களின் இரண்டாவது மகனாவார்.