மாமாங்கேஸ்வரர் கோயில் முன்றலில் நடைபெறவிருக்கும்   ஆற்றுகைகளும், காட்சிப்படுத்தல்களும்.

0
330

மாமாங்கேஸ்வரர் கோயில் முன்றலில் வருகின்ற 22, 23, 24ஆம் திகதிகளில் ( 22,23,24.07.2022)  மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்களின் மற்றும் சூரியா பெண்கள் கலாசார குழுவினரின் ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்களும் இடம்பெறுகின்றன .

தற்கால பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் தங்கள் தங்களது உள்ளூர்களில் விளைகின்ற நஞ்சற்ற உணவுகளை உண்ண வேண்டிய மற்றும் பயிரிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், உள்ளூர் உணவு வளங்களை, உணவு முறைகளை வெளிக்கொணர கூடிய வகையிலும் சூரியா பெண்கள் கலாசார குழுவினரின் எழுத்தாணி நாடக அளிக்கையும் கலந்துரையாடல்களும் இடம்பெற இருக்கின்றன.

மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்களது பாடல்கள், தற்கால நெருக்கடிச் சூழலில் உள்ளூர் உணவுகளை, உற்பத்திகளை பெருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்,  இயற்கையின் வளங்களை நினைவு கூறுவதும் பாதுகாத்தலும் என்ற வகையிலும் தற்கால சூழலோடு இணைந்த வகையில் பல்வேறு தொனிப்பொருள்களில் இடம்பெற இருக்கின்றன.

மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்களில் ஒருவராக இணைந்து பயணித்து வரும் சிந்து உஷாவின் நன்னிலம் – உள்ளூர் மரக்கன்றுகளின் விற்பனை நிலையத்தில் இருந்து மரக்கன்றுகள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

மாமாங்க ஆலய முன்றலில் ( 22, 23, 24 . 07 2022) திகதிகளில் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் என இருபொழுதுகளில் ஆற்றுகைகள், கலந்துரையாடல்கள், காட்சிப்படுத்தல்கள்  நடைபெறவிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here